Monday, 7 December 2020

Kaniye Karthar Virumbum Madura Kaniye Song Lyrics கனியே கர்த்தர் விரும்பும் மதுர கனியே

 கனியே கர்த்தர் விரும்பும் மதுர கனியே

காணவே அன்பால் உன்னை தேடி வாராரே {2}


1) பூத்து மலரும் பூவல்ல

பூவையர் விரும்பும் பூவல்ல {2}

மாந்தர் விரும்பும் பூவல்ல

மகிமை இயேசு விரும்பும் அன்பு

                                                           - கனியே

2) ஜாதி விலகிடும் தோஷமல்ல

அது சாத்தானால் வரும் தோஷமல்ல {2}

மக்களால் உண்டாகும் தோஷமல்ல

அது மகிபன் விரும்பும் சந்தோஷம்

                                                          - கனியே

3) சாத்திரம் சாட்டும் தானமல்ல

அது சத்திரம் கட்டிடும் தானமல்ல {2}

மாந்தர்கள் செய்திடும் தானமல்ல

நம் மகிபன் விரும்பும் சமாதானம்

                                                          - கனியே

4) புத்தகம் எழுதும் மை அல்ல

பூவையர் தீட்டிடும் மை அல்ல {2}

மாந்தரை மயக்கும் மை அல்ல

மா கோபத்தில் காட்டிடும் பொறுமை

                                                          - கனியே

5) இத்தரையோர் காட்டும் இரக்கமல்ல

ஏழைக்கிரங்கும் இரக்கமல்ல {2}

பெருமையில் காட்டும் இரக்கமல்ல

நம் விதியை விரும்பும் தயவு

                                                          - கனியே

6) நாவலர் பழக்கும் குணமல்ல

நல்லோராய் நடக்கும் குணமல்ல {2}

சன்மார்க்கம் என்ற குணமல்ல

சத்தியத்தில் நிற்கும் நற்குணம்

                                                          - கனியே

7) பூக்களில் உண்டாகும் வாசமல்ல

புது செயற்கையில் உண்டாகும் வாசமல்ல {2}

பன்னீரால் உண்டாகும் வாசமல்ல

பரன் இயேசுவில் வைக்கும் விசுவாசம்

                                                           - கனியே

8) நாவில் விளங்கும் சாந்தமல்ல

சத்தத்தை அடக்கும் சாந்தமல்ல {2}

சாந்த சொரூபி இயேசு நுகத்தில்

சாய்ந்து சுமக்கும் சாந்தம்

                                                             - கனியே

9) அமர்ந்திருப்பது அடக்கமல்ல

அழகை வெறுப்பது அடக்கமல்ல {2}

உலக இச்சைக்கு ஓடி விலகி

உன்னதரை தேடும் இச்சையடைக்கம்

                                                             - கனியே

ஏமாற்றம் என்ற இளைஞரோடு

இயேசு தேடும் கனி இல்லை {2}

அந்தோ சாவும் நெருங்குது

அத்திமரம் பட்டு போகுது


கனியே கர்த்தர் விரும்பும் மதுர கனியே

காணவே அன்பால் உன்னை தேடி வாராரே {2}


#franciscreations

No comments:

Post a Comment