Monday, 12 December 2022

பரிசுத்தமாகுதல் - வாழ்நாள் முழுவதும் நடைபெறும் செயல் - சகரியா பூணன்

தேவன் உங்களுக்கு, வரும் நாட்களுக்கென்று ஓர் ஊழியத்தை வைத்திருக்கிறார், எனவே எப்போதும் தாழ்மையுடன் இருந்து, எந்த சூழ்நிலையிலும் உங்களை நியாயப்படுத்தாமல், உதவிக்காக தேவனிடம் தொடர்ந்தேச்சையாகக் கூக்குரலிடுவதன் மூலமும், உங்கள் வாழ்க்கையில் உள்ள அனைத்து செயற்கைத்தன்மையையும் வெறுப்பதன் மூலமும், அந்த ஊழியத்துக்கு உங்களைத் தயார்படுத்திக் கொள்ளுங்கள்.

நீதியை நாடிச் செல்லும் அனைவருக்கும் பரிசேயத்தனமும், ஆவிக்குரிய பெருமையும் மிக அருகாமையில் இருக்கிறது. எனவே இந்த இரட்டைத் தீமைகள் எந்த ஒரு குழுவிற்கும் சொந்தமானது அல்ல. இந்தத் தீமைகள் நம்மில் எவருக்கும் வெகு தொலைவில் இல்லை. இந்தத் தீமைகளை மற்றவர்களிடம் பார்ப்பது மிக எளிது, ஆனால் அவை நம்மில் இருப்பதைப் பார்ப்பது மிகவும் கடினம் என்பதை நான் காண்கிறேன். பக்திமார்க்கம் சார்ந்த எண்ணம் கொண்ட இளைஞர்கள் எளிதில் நோக்கிச் செல்லும் விஷயங்களில் ஒன்று பரிசேயத்தனம், அது ஆவிக்குரிய தன்மையைக் கொன்றுவிடுகிறது.

நீங்கள் போராடிக் கொண்டிருக்கும் வெவ்வேறு பகுதிகளில், பாவத்துக்கு "முழுமையாய்" மரிக்கும் மரணத்துக்குள் நுழைய நீங்கள் பிரயாசப்பட வேண்டும். மேலோட்டமான வெற்றியில் நீங்கள் மகிழ்ச்சியடையக்கூடாது. ஒவ்வொரு விருப்பமும் ஒரு வெங்காயம் போன்றது. நீங்கள் இப்போது பார்க்கக்கூடிய மேல் தோலின் கீழ் இன்னும் எத்தனையோ அடுக்கு தோல்கள் அடியில் உள்ளன. நீங்கள் பார்க்கும் இந்தத் தோலை நீங்கள் தீவிரமாகக் கையாளாத வரை, கீழே உள்ளவைகளுக்கு நீங்கள் ஒருபோதும் செல்ல முடியாது.

பரிசுத்தமாகுதலானது வாழ்நாள் முழுவதும் இயேசுவைப் போல மாறுவதற்கான ஒரு செயல்முறையாகும். உதாரணமாக, ஸ்திரீகளை அவர் பார்த்த விதமாகப் பார்ப்பது, பணத்தையும் பொருளையும் அவர் பார்த்த விதத்தில் பார்ப்பது, உங்கள் எதிரிகளை அவர் தம் எதிரிகளைப் பார்த்த விதமாகப் பார்ப்பது போன்ற செயல்கள். அந்த இலக்கை அடைய முழு வாழ்நாட்களும் தேவைப்படும். ஆனால் நீங்கள் அதற்கென்று பிரயாசப்பட வேண்டும். "பூரணராகும்படி கடந்து போவோமாக" (எபிரெயர் 6:1), "அவர்மேல் இப்படிப்பட்ட நம்பிக்கை வைத்திருக்கிறவனெவனும், அவர் சுத்தமுள்ளவராயிருக்கிறதுபோல, தன்னையும் சுத்திகரித்துக்கொள்ளுகிறான்" (1யோவான் 3:3), மற்றும் "பின்னானவைகளை மறந்து, முன்னானவைகளை நாடி, கிறிஸ்து இயேசுவுக்குள் தேவன் அழைத்த பரம அழைப்பின் பந்தயப்பொருளுக்காக இலக்கை நோக்கித் தொடருகிறேன்" (பிலிப்பியர் 3:13,14) போன்ற வசனங்களின் பொருள் இது தான். நீங்கள் இந்தப் போராட்டத்தில் விட்டுக்கொடுத்தால், எதிரியின் கை மேலோங்கி விடும். மாறாக, நீங்கள் அந்தரங்கத்தில் தொடர்ச்சியாக "மாம்சத்தில் பாடுபட்டால்" (உங்கள் சுயத்தை மரணத்திற்கு உட்படுத்தினால்), 1பேதுரு 4:1,2 கூறுவது போல் பாவம் செய்வதை நிறுத்திவிடுவீர்கள்.

மற்றவர்கள் சோதிக்கப்படாத விதத்தில் நீங்கள் சோதிக்கப்படுகிறீர்கள் என்று ஒருபோதும் கற்பனை செய்துகொள்ளாதீர்கள். அந்தப் பொய்யின்மூலம் சாத்தான் உங்களை ஏமாற்ற விடாதீர்கள், ஏனென்றால் அது உங்களை அதைரியப்படுத்தி விடும்.

1கொரிந்தியர் 10:13 சொல்லுகிறது: "நீங்கள் சந்திக்கும் ஒவ்வொரு சோதனையும் எல்லா மனுஷருக்கும் பொதுவாக வருகிற சோதனையைப் போன்றதாகவே இருக்கிறது. ஆனால், தேவன் தம் வாக்கைக் காப்பாற்றுகிறார். சோதனையை மேற்கொள்ள உங்களுக்கு இருக்கும் பெலனுக்கு மிஞ்சிய சோதனையை அவர் உங்களுக்கு அனுமதிக்க மாட்டார். ஆனால், நீங்கள் சோதிக்கப்படுகிற அதே வேளையில், அதை மேற்கொள்ளத்தக்க பெலனை (கிருபையை) அவர் உங்களுக்குத் தந்து, அவ்விதமாக அந்த சோதனையில் நீங்கள் விழாமல் தப்பிக்கொள்ள உதவிசெய்வார். எந்த சோதனையும் எதிர்த்துநிற்கக்கூடாதது அல்ல." (நற்செய்தி(Good News) மொழிபெயர்ப்பு மற்றும் லிவிங்(Living) மொழிபெயர்ப்பு).

அடிப்படையில், தங்கள் சொந்த சித்தத்தை செய்யவே எல்லா மனுஷரும் ஒரே மாதிரியாக சோதிக்கப்படுகிறார்கள். பாவம் என்பது பல்வேறு பாகங்களைக் கொண்ட ஒரு பெரிய வட்டம். ஆனால் ஒவ்வொரு சோதனையும் அடிப்படையில் ஒன்றுதான். தேவனுடைய சித்தத்தை மறுத்து தன்னுடைய சொந்த சித்தத்தைச் செய்வதற்கான சோதனை. பொய் பேசுவதானாலும், கோபம் கொள்வதானாலும், ஒருவரை வெறுப்பதானாலும், முறுமுறுப்பதானாலும், விபச்சாரம் செய்வதானாலும் அல்லது வேறு எந்தப் பாவமானாலும், அடிப்படையில் சோதனை ஒன்று தான். இயேசுவும் தம்முடைய சொந்த சித்தத்தைச் செய்யும்படிக்கு சோதிக்கப்பட்டார். ஆனால் அவர் தேவனுடைய உதவியைக் கேட்டு சோதனையை எதிர்த்துநின்றபடியால் (எபிரெயர் 5:7) அவர் ஒருபோதும் பாவம் செய்யவில்லை (யோவான் 6:38). நாம் யாவரும் இப்போது அவருடைய முன்மாதிரியைப் பின்பற்றமுடியும்.

எனவே வெவ்வேறு பாவங்களை ஒன்றுக்கொன்று தொடர்பில்லாத தனித்தனி விஷயங்களாகப் பார்க்காதீர்கள். சிலர் ஒரு பகுதியிலும், மற்றவர்கள் மற்றொரு பகுதியிலும் அதிகமாக சோதிக்கப்படுகிறார்கள். ஆனால் ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும், பாவம் என்பது ஒருவர் தனது சொந்த விருப்பத்தை செய்வதாகும். உங்களுக்கு உதவி செய்யும்படி தேவனிடம் கேளுங்கள் - பரிசுத்த ஆவியானவர் உங்கள் மாம்சத்தை (சுய விருப்பத்தை) மரணத்திற்கு உட்படுத்த உதவுவார் (ரோமர் 8:13 மற்றும் கலாத்தியர் 5:24 -ஐப் பார்க்கவும்).

இயேசுவின் மீதுள்ள ஊக்கமான பக்தியே நீங்கள் வெற்றி பெறவும், எல்லா நேரங்களிலும் சரியான பாதையில் பாதுகாக்கப்படவும் உதவும். எல்லா நேரங்களிலும், "பூலோகத்தில் உம்மைத் தவிர (ஒருவர் மீதும்) எனக்கு வேறே விருப்பம் இல்லை" (சங்கீதம் 73:25என்று நீங்கள் கூற முடியும். உங்கள் இருதயத்திலிருந்து மற்ற அன்புகளை (இச்சைகளையும்) வெளியேற்றும் ஆற்றல் இயேசுவின் மீதான அன்புக்கு உண்டு. "நான் கர்த்தரை எப்பொழுதும் எனக்கு முன்பாக வைத்திருக்கிறேன் (அதனால் நான் பாவம் செய்ய பயப்படுகிறேன் - யோசேப்பு சொன்னது போல)" என்றும், "அவர் எப்போதும் என் வலது பாரிசத்தில் இருக்கிறார் (பாவம் செய்யாமல் வாழ எனக்கு கிருபை அளிப்பதற்காக)" (சங்கீதம் 16:8) என்றும் நீங்கள் சொல்ல வேண்டும். அதுவே தொடர்ச்சியான வெற்றியில் வாழ்வதற்கான இரகசியமாகும்.

Please watch : https://tamil.cfcindia.com/sermons

Monday, 7 December 2020

Kaniye Karthar Virumbum Madura Kaniye Song Lyrics கனியே கர்த்தர் விரும்பும் மதுர கனியே

 கனியே கர்த்தர் விரும்பும் மதுர கனியே

காணவே அன்பால் உன்னை தேடி வாராரே {2}


1) பூத்து மலரும் பூவல்ல

பூவையர் விரும்பும் பூவல்ல {2}

மாந்தர் விரும்பும் பூவல்ல

மகிமை இயேசு விரும்பும் அன்பு

                                                           - கனியே

2) ஜாதி விலகிடும் தோஷமல்ல

அது சாத்தானால் வரும் தோஷமல்ல {2}

மக்களால் உண்டாகும் தோஷமல்ல

அது மகிபன் விரும்பும் சந்தோஷம்

                                                          - கனியே

3) சாத்திரம் சாட்டும் தானமல்ல

அது சத்திரம் கட்டிடும் தானமல்ல {2}

மாந்தர்கள் செய்திடும் தானமல்ல

நம் மகிபன் விரும்பும் சமாதானம்

                                                          - கனியே

4) புத்தகம் எழுதும் மை அல்ல

பூவையர் தீட்டிடும் மை அல்ல {2}

மாந்தரை மயக்கும் மை அல்ல

மா கோபத்தில் காட்டிடும் பொறுமை

                                                          - கனியே

5) இத்தரையோர் காட்டும் இரக்கமல்ல

ஏழைக்கிரங்கும் இரக்கமல்ல {2}

பெருமையில் காட்டும் இரக்கமல்ல

நம் விதியை விரும்பும் தயவு

                                                          - கனியே

6) நாவலர் பழக்கும் குணமல்ல

நல்லோராய் நடக்கும் குணமல்ல {2}

சன்மார்க்கம் என்ற குணமல்ல

சத்தியத்தில் நிற்கும் நற்குணம்

                                                          - கனியே

7) பூக்களில் உண்டாகும் வாசமல்ல

புது செயற்கையில் உண்டாகும் வாசமல்ல {2}

பன்னீரால் உண்டாகும் வாசமல்ல

பரன் இயேசுவில் வைக்கும் விசுவாசம்

                                                           - கனியே

8) நாவில் விளங்கும் சாந்தமல்ல

சத்தத்தை அடக்கும் சாந்தமல்ல {2}

சாந்த சொரூபி இயேசு நுகத்தில்

சாய்ந்து சுமக்கும் சாந்தம்

                                                             - கனியே

9) அமர்ந்திருப்பது அடக்கமல்ல

அழகை வெறுப்பது அடக்கமல்ல {2}

உலக இச்சைக்கு ஓடி விலகி

உன்னதரை தேடும் இச்சையடைக்கம்

                                                             - கனியே

ஏமாற்றம் என்ற இளைஞரோடு

இயேசு தேடும் கனி இல்லை {2}

அந்தோ சாவும் நெருங்குது

அத்திமரம் பட்டு போகுது


கனியே கர்த்தர் விரும்பும் மதுர கனியே

காணவே அன்பால் உன்னை தேடி வாராரே {2}


#franciscreations

Tuesday, 21 April 2020

Visuvasiye Ninaithu Par Song Lyrics Augustine Jebakumar


       

விசுவாசியே நினைத்து பார் 
நிலைப்பவைகளை நாடு 
நித்திய ஜீவன் பெற  -2


ஓடி வருவாயே இன்றே 
பாடி மகிழ்வாயே அன்றே -2


  1. அறுப்பு மிகுதி ஆளோ இல்லை 
            வெறுப்பில் அலையும் மாந்தர் மிகுதி -2
            நினைத்து புலம்பி அலைந்து தேடு  -2
            செயல்பட்டால் இன்றே மகிழுவாய் அன்றே  -2


  1. நீ போகாவிடில் யார் போவார் 
            இப்போதில்லாவிடில் எப்போ  -2
            கணக்கு கேட்பார் என்ன செய்வாய்  -2 
            கண்ணீர் விடுவாயோ கர்த்தரை கண்டு  -2


  1. நீ பேசாவிடில் கற்கள் பேசும் 
            நீ இல்லாவிடில் வேறே யாரோ  -2
            மனம் திரும்பு உலகத்தை விட்டு  -2
            செயல்பட்டால் இன்றே மகிழுவாய் அன்றே -2


  1. வருகையின் நாள் சமீபமே 
            வல்லமை தேவன் வெளிப்படவே  -2
            பூமி அழியும் பூதலம் எரியும்  -2
            சேர்த்திட்ட பொக்கிஷம் யாருக்கு சேரும்  -2

                                     -அண்ணன் அகஸ்டின் ஜெபக்குமார்

Wednesday, 25 October 2017

Love on common People by Bro. D.G.S Dhinakaran



"... And the common people heard Him gladly" (Mark 12:37). The Bible says that the common people gladly heard what Jesus told them. Yes, He never shunned anyone. He loved everyone; He accepted everyone. Four people carried a paralytic man to Jesus Christ. He saw the faith of these four people and healed him saying, "Son, your sins are forgiven". The Lord Jesus could understand that his sickness was because of his evil life. Yet, He never called him ‘Sinner’  rather He called him 'my son’. Another woman also came to Jesus. She had issue of blood for 12 years. She touched the garment of Jesus and she was healed. The Lord Jesus said to her, `My daughter, your faith has made you whole, go in peace”. 

Dear brother and sister! The world may call you a sinner. People may reject you because of your sickness or infirmities. They may desert you. Cheer up! The Lord Jesus loves you. He will forgive your sins, on this new day you which you have chosen to seek His word. He will call you with love as ‘My son/ My daughter’. He will heal your diseases.
Once, I had gone to a town called Kothagudem, in Andhra Pradesh to conduct Good News meetings. Nearly 150,000 people from all over the place had gathered there. I finished my preaching and the presence of God came upon me. When I was filled with the love and compassion of the Lord Jesus, I became different and said, ‘There is a young man in this crowd, who is a drunkard. Because of excess drinking, your liver is completely damaged”. I did not want to mention his name since thousands were there. But I said these words, pointing my finger at his direction. But the Lord Jesus wanted me to mention his name so I called out "Benjamin, repent tonight! Even now you are fully drunk”. When people came up to give testimony Benjamin was there. Jesus forgave his sin, and within a split second Jesus healed his liver. 

Dearly beloved, even today, He is full of love for you to forgive your sins and heal you. This is because He has loved you and has given Himself up to die on the cross just for you. This Lord, who died for your sake, loves you. When He was hanging on the cross, the Roman soldiers were watching Him. One of them pierced His heart with a spear and immediately blood and water came out (John 19:34). He who has seen has testified, and his testimony is true; and he knows that he is telling the truth. The love of the Lord Jesus, who shed the last drop of His blood, is never changing. It is eternal. He will forgive your sins on this new day, with His eternal love. He will heal your sicknesses and He will keep you as a blessing to others.
 
Prayer:
How great is your love, Lord Jesus! Though we are unworthy of your love by the sins we commit, you have called us your children. We thank you for the salvation we have received through the finished work on the cross.
We commit ourselves into your mighty hands.
Amen!

Sunday, 22 October 2017

The Blessing of the Lord! by Dr. Paul Dhinakaran

Dear Friend!

When God desires to bless you, can anyone dare to stand against you? The Bible says, “The blessing of the Lord makes one rich, and He adds no sorrow with it.” God alone can bless us in this unique manner. God told Moses, “When Aaron and his children bless My people saying, ‘The Lord bless you and keep you, the Lord make His face shine upon you, and be gracious to you; the Lord lift up His countenance upon you, and give you peace’, I will bless them accordingly” (Numbers 6:24-27).


The LORD has been mindful of us; He will bless us; He will bless the house of Israel; He will bless the house of Aaron.


A couple lived in poverty with their five children. One day, one of their children had gone to a shop. The shopkeeper blamed him falsely for theft, just because he was poor. The boy came home crying bitterly. This incident hurt the mother’s heart greatly. After everyone had left the house, she went into the room with her 5-year-old child, opened the valve of the gas cylinder, laid herself on the bed embracing her child and awaited death. Her little child bombarded her with many questions. As she quieted the child, a song came through a radio in the next room with the lyrics, “What a friend we have in Jesus…” The love of Jesus that rose from the song instilled fresh hope in her heart. She got up from the bed, went straight to the place where the radio was playing and said, “Lord Jesus, please forgive all my sins. Remove all our burdens and travails. Please save our family.” She wept bitterly. The Lord Jesus consoled her and restored all the lost blessings, one after the other to this dear family.



Beloved, the name of Jesus brings hope to the hopeless. The Lord who blessed this couple will surely bless you. As you are a child of God, God loves to bless you. Do not be disheartened. “The Lord has been mindful of us; He will bless us; He will bless the house of Israel.” (Psalm 115:12). In your inadequacies, seek God. He will fill you with His blessing.





Prayer:
Loving Heavenly Father,
I thank You for You love to bless me. I feel so blessed. I bring my needs before You. Lord, remove every inadequacy from my life. Help me to have a prosperous life so that I will be a blessing to others. May it bring glory to Your name.
In Jesus’ name I pray,
Amen.
https://www.prayertoweronline.org/