விசுவாசியே நினைத்து பார்
நிலைப்பவைகளை நாடு
நித்திய ஜீவன் பெற -2
ஓடி வருவாயே இன்றே
பாடி மகிழ்வாயே அன்றே -2
- அறுப்பு மிகுதி ஆளோ இல்லை
வெறுப்பில் அலையும் மாந்தர் மிகுதி -2
நினைத்து புலம்பி அலைந்து தேடு -2
செயல்பட்டால் இன்றே மகிழுவாய் அன்றே -2
- நீ போகாவிடில் யார் போவார்
இப்போதில்லாவிடில் எப்போ -2
கணக்கு கேட்பார் என்ன செய்வாய் -2
கண்ணீர் விடுவாயோ கர்த்தரை கண்டு -2
- நீ பேசாவிடில் கற்கள் பேசும்
நீ இல்லாவிடில் வேறே யாரோ -2
மனம் திரும்பு உலகத்தை விட்டு -2
செயல்பட்டால் இன்றே மகிழுவாய் அன்றே -2
- வருகையின் நாள் சமீபமே
வல்லமை தேவன் வெளிப்படவே -2
பூமி அழியும் பூதலம் எரியும் -2
சேர்த்திட்ட பொக்கிஷம் யாருக்கு சேரும் -2
-அண்ணன் அகஸ்டின் ஜெபக்குமார்
No comments:
Post a Comment